க்ளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தேனி பாரத் டாக்டர் ஆர்.சுருளிவேல் தயாரித்துள்ள படம் ‘பேய காணோம்’.
செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இப்படத்தில் தற்பொழுது தேடல் நாயகியாக ஒளிந்து வாழ்ந்து வரும் மீரா மிதுன், தருண் கோபி, கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், விஜய் டிவி புகழ் கோதண்டம், ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. HI CREATORS பட நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரப் வன்னியரசு பேசும்போது, “இந்தப் படத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நடிகை மீரா மிதுன் மீது புகார் கொடுக்கப்பட்டு அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு வழக்கில் கைதாகி பிறகு தலைமறைவாகி படத்தை முடிப்பதற்குக்கூட ஆள் இல்லாத நிலைமையில் படத்தை முடித்ததாக சொன்னார்கள். இது மீடியாவிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதேபோல் இன்றைக்கு நயன்தாராவுக்கு திருமணமாகி நான்கு மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வியும் பெரிய வைரல் ஆனது. பிரம்மனின் தலையில் இருந்து பிராமணன் பிறந்தான்; தோளில் இருந்து சத்ரியன் பிறந்தான்; காலில் இருந்து சூத்திரன் பிறந்தான் என்பதை நம்புகிறவர்கள், நயன்தாராவுக்கு குழந்தை பிறந்ததை மட்டும் கேள்வி கேட்கிறார்கள்.
விடுதலைக்கு முன்பான காலக்கட்டத்திலிருந்தே திரைப்படங்கள் சமூக விடுதலைக்கான மாற்றத்திற்கான கருவியாய் இருந்து வருகிறது. இந்தி திணிப்பு, இந்தி ஆதிக்கம் என்ற சூழ்நிலையில் அரசியல் நெருக்கடி இருக்கிறது. அந்த அடிப்படையில் நெருக்கடிகளை மீட்டெடுக்கும் திரைப்படங்களை தமிழ் சினிமா தர வேண்டும். இந்தப் படமும் மாற்றத்தை தரக்கூடிய படமாக இருக்கவேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்” என்றார்.