full screen background image

சினிமா டிக்கெட் விலையில் தள்ளுபடியாம் – ‘பேய காணோம்’ படக் குழு அதிரடி அறிவிப்பு..!

சினிமா டிக்கெட் விலையில் தள்ளுபடியாம் – ‘பேய காணோம்’ படக் குழு அதிரடி அறிவிப்பு..!

குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர்.R.சுருளிவேல் தயாரிப்பில் மீரா மிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பேய காணோம்’.

இப்படத்தின் பாடல்கள் hi creators யூ  டியூப் சேனலில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது.

“இது என் கொடி பறக்கும் நேரம்” என்ற பாடலை, செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி மற்றும் கெர்ஷோமும், “சுடுகாட்டுலதான் இருப்பேண்டி; நடு சாமத்துல வருவேண்டி” என்ற பாடலை வேல்முருகனும் பாடியுள்ளார்கள்.

இத்திரைப்படம் சென்சார் ஆன  நிலையில் ‘பேய காணோம்’ படத்தைப் பார்த்த Hi Creators நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வாங்கியுள்ளார்கள்.

‘பே காணோம் படம் விரைவில் திரைக்கு வந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தும். நல்ல காமெடியான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து மக்களையும்  சென்றடைய வேண்டும் என்பதற்காக இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் கட்டணத்தில் இருந்து  60% தள்ளுபடியும், இரண்டாம் நாள் 40%  தள்ளுபடியும் செய்து டிக்கெட்  வழங்கப்பட இருக்கிறது.

இதற்காக விநியோகஸ்தர்களிடமும், திரையரங்கு உரிமையாளர்களிடமும் Hi Creators  நிறுவனத்தினர் பேசி வருகின்றனராம்.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை..!

Our Score