full screen background image

மீண்டும் பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் ‘பேட்ட ராப்’

மீண்டும் பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் ‘பேட்ட ராப்’

1990-களில் இளைஞர்களை ஆடவைத்த “பேட்ட ராப்” பாடலை நம்மால் மறக்க முடியாது. நடன புயல் “இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” பிரபுதேவாவின் அதிரடி நடனத்தில் இயக்குநர் SJ Sinu இயக்கத்தில்‌ “பேட்ட ராப்” என்ற திரைப்படம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகிக்  கொண்டிருக்கிறது.

BLUE HILL FILMS BANNER நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி.சாம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இயக்கம் – S.J.Sinu, கதை திரைக்கதை – தினில் பி.கே., ஒளிப்பதிவு – ஜித்து தாமோதர், படத் தொகுப்பு – நிஷாத் யூஸப், கலை இயக்கம் – A.R மோகன், தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – சசிகாந்த்.S., Executive producer – ரியா.S., ஆடை வடிவமைப்பாளர் – அருண் மனோகர், ஒப்பனை – அப்துல் ரகுமான், நடன இயக்கம் – ராபர்ட், பூபதி ராஜா, சண்டை பயிற்சி இயக்கம் – தினேஷ் காசி, விக்கி மாஸ்டர், பாடல்கள் – விவேகா, மதன் கார்த்தி, VFX – Effects & Logistics, Creative Support – சஞ்ஜய் கஸல், இணை இயக்குநர் – அஞ்சு விஜய், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் S.J.Sinu பேசும்போது, “இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடியாக நடித்திருக்கும் வேதிகா, பிரபுதேவாவுடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார். இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆட வைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக இது வந்திருக்கிறது..” என்றார்.

பிப்ரவரி 14, காதலர் தினமான இன்றைக்கு திரையுலகப் பிரபலங்கள் தங்களது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின்‌ “FIRST LOOK” போஸ்டரை பகிர்ந்துள்ளார்கள்.

Our Score