“எனக்கு சண்டை காட்சிகளை அமைக்கத் தெரியவில்லை என்றார் இயக்குநர் ஜீவா”-சொல்கிறார் பீட்டர் ஹெயின்

“எனக்கு சண்டை காட்சிகளை அமைக்கத் தெரியவில்லை என்றார் இயக்குநர் ஜீவா”-சொல்கிறார் பீட்டர் ஹெயின்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சண்டை இயக்குநர்களில் ஒருவர் பீட்டர் ஹெயின்.

‘ரன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘மகதீரா’, ‘பாகுபலி’. ‘அசுரன்’, ‘பேட்ட’ என்று பல புகழ் பெற்ற படங்களுக்கு சண்டை இயக்குநராகப் பணியாற்றியவர் இவர்.

இவர் ‘ரன்’ படத்துக்கு சண்டை இயக்குநராகப் பணியாற்றியபோது அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான ஜீவாவுக்கும், இவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கிறது.

இது பற்றி பீட்டர் ஹெயின் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்தபோது, “ரன்’ படத்தின் ஷூட்டிங்கின்போதே எனக்கு சண்டை காட்சிகள் அமைக்கத் தெரியவில்லை” என்று குற்றம் சாட்டினார் ஜீவா ஸார். “அதோடு நான் அமைக்கும் சண்டை காட்சிகள் கேமிராவுக்கு ஏற்றபடி இல்லை…” என்றும் சொன்னார்.

ஆனால் நானோ, “முழுமையாக சண்டைக் காட்சியை வடிவமைத்து, நடிக்க வைத்து, ஷூட் செய்த பின்பு போட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்…” என்றேன். அதேபோல் அந்த சண்டை காட்சியை படமாக்கிய பின்பு மானிட்டரில் பார்த்த பின்புதான் ஜீவா என் திறமையை அங்கீகரித்தார்.

இப்போதும் அந்த ‘ரன்’ படத்தில் மாதவன் ஷட்டரை இறக்கிவிட்டு சண்டையிடும் காட்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது..

இதே ஜீவா ஸார்தான், ஹிந்தியில் அவர் ஒரு படத்தை இயக்கும்போது அங்கேயும் எனக்காக சண்டை இயக்குநர் பொறுப்பை வாங்கிக் கொடுத்தார்..” என்று நன்றியுடன் சொல்கிறார் பீட்டர் ஹெயின்.

Our Score