full screen background image

நெதர்லாந்து நாட்டின் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ‘பேரன்பு’ திரைப்படம்

நெதர்லாந்து நாட்டின் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ‘பேரன்பு’ திரைப்படம்

ஸ்ரீராஜலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.L.தேனப்பன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பேரன்பு’.

இந்தப் படத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கும் கேரளாவின் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி, தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ சாதனா, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி, இயக்குநர் அமீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’  படங்களை இயக்கிய இயக்குநர் ராமின் இயக்கத்தில் இந்த ‘பேரன்பு’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

எழுத்து, இயக்கம் – ராம், இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் படத் தொகுப்பு – சூரிய பிரதமன், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், பாடல்கள் – கவிப் பேரரசு வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், ஒலிக்கலவை – சுரேன்.G, சிறப்பு சப்தம் – M.J.ராஜூ, இணை தயாரிப்பு – T.சரஸ்வதி, மக்கள் போடர்பு – நிகில்.

சிறந்த விருதுக்குரிய திரைப்படங்களை தேடிப் பார்த்து அவற்றை வாங்கி வெளியிடும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷனின் நிர்வாகியான ஜே.சதீஷ்குமார், இந்தப் படத்தை வாங்கி வெளியிடவிருக்கிறார்.

jsk sathish-ram-pl-thenappan

‘பேரன்பு’ திரைப்படத்தின் பெருமைக்கு மகுடம் சேர்க்கும்விதமாக 47-வது நெதர்லாந்து நாட்டில் உள்ள ராட்டர்டாம் நகரில் வருடாவருடம் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இந்த ‘பேரன்பு’ திரைப்படம் தேர்வானது.

கடந்த 27-ம் தேதி ராட்டர்டாம் நகரில் உள்ள பாதே(Pathe) திரையரங்கில் ‘பேரன்பு’ படத்தின் முதல் உலக பிரத்தியேக காட்சி(World Premiere) திரையிடப்பட்டது.

இத்திரைப்படம் திரையிடப்பட்டபோது படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் ராம், விநியோகஸ்தர் ஜே.சதீஷ்குமார் மூவரும் கலந்து கொண்டனர்.

மேலும் இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளவிருக்கும் இந்த ‘பேரன்பு’ திரைப்படம், வரும் கோடைக் காலத்தில் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

Our Score