ஜப்பான் சூறாவளியில் சிக்கிய ‘பென்சில்’ படக் குழு

ஜப்பான் சூறாவளியில் சிக்கிய ‘பென்சில்’ படக் குழு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் ‘பென்சில்’.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு அண்மையில் ஜப்பானில் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட நூரி எனும் கடும் சூறாவளியில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் சிக்கித் தவித்துப் போய்தான் நாடு திரும்பியுள்ளனர்.

ஜப்பானில் உள்ள ‘யட்சுகடகே’ எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படக் குழுவினர் விஞ்ச் மூலம் மலை உச்சிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அப்போது மலை உச்சியில் கடும் குளிர் நிலவியது.

பிராண வாயு பற்றாக்குறையால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கதாநாயகி ஸ்ரீவித்யாவின் தாயார் கடுமையாக பாதிக்கப்பட்டபோது குழுவில் இருந்த தயாரிப்பாளர் மருத்துவர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்து காப்பாற்றினாராம். இருப்பினும் மற்றவர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருக்கின்றனர். படப்பிடிப்பு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், குழுவினர் ஒத்துழைப்புடன் திட்டமிட்டபடி காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ்.

படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக் குழுவினர் நேற்று சென்னை திரும்பினர்.

Our Score