full screen background image

டாஸ்மாக் குடிமகன்களுக்கோர் நற்செய்தி..!

டாஸ்மாக் குடிமகன்களுக்கோர் நற்செய்தி..!

டாஸ்மாக் கடையை இழுத்து மூடணும்.. குடியே நாட்டில் இருக்கக் கூடாது என்று பெருவாரியாக மக்களின் கருத்துக்கள் வெளியாகி போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க.. சத்தமே இல்லாமல் இன்னொரு பக்கம் உடலுக்கு பிரச்சினை வராமல் குடிப்பதற்கு சைட் டிஷ் போல ஒரு மருந்து தண்ணீரை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வழக்கமாக டாஸ்மாக் சரக்குடன் தண்ணீர், சோடா மற்றும் குளிர் பானங்களை கலப்போமே.. அதையெல்லாம் செய்யாமல் இந்த பெலிகானா டிடி என்னும் பானத்தை சிறிதளவு கலந்து சாப்பிட்டால் மதுவினால் ரத்த்த்தில் ஏற்படும் அசிட்டில் அமிலம் உண்டாகாமல் தடுத்து பல்வேறு பிரச்சினைகளை தடுத்துவிடும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் இதனை கண்டறிந்தவர்கள்.

இது குறித்து இதனை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கும் Buzz Live Foods நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாக்டர் சுந்தரவேலு ராமன் கூறியது இது :

sundaravelu raman

“பொதுவாக நாம் அருந்தும் காற்றேற்றப்பட்ட பானங்களில் (airated drinks)  கரைந்துள்ள வாயுக்களால் உடலுக்கு பல  தீமைகள் ஏற்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்த தீமைகளை  தடுக்கும்  ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள்  நிறைந்த இந்த புதிய பானம் கூடவே முழு உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும் ஒன்று என்பதுதான் இதன்  சிறப்பு.

ஆல்கஹால் கலந்த பானங்களுடன் இந்த பெலிகானா டி.டி.யை சேர்த்து அருந்தும்போது, அந்த ஆல்கஹால் பானங்களில்  இருக்கும் கேஸ் உள்ளிட்ட  உடலுக்குத் தீங்கு செய்யும் பல்வேறு பொருட்களின் இயல்புகளை இது மாற்றுகிறது. அதனால் அந்த ஆல்கஹால் பானங்களின்  பாதிப்புகளைக் குறைத்து அதை நல்லதொரு ஆரோக்கிய பானமாக மாற்றுகிறது.

எந்த விதமான ரசாயனங்களோ, காரத் தன்மை வாய்ந்த பொருட்களோ,  செயற்கையான வஸ்துக்களோ, பதப்படுத்தும் பொருட்களோ இல்லாமலேயே பெலிகானா டி.டி. பானம் இந்த வேலையை செய்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.

பீர், பிராந்தி, விஸ்கி, வோட்கா, ரம், ஜின் போன்ற ஆல்கஹால்  பானங்களும் கார்பன் சேர்க்கப்பட்ட மற்ற பல குளிர்  பானங்களும் அடிப்படையில் அமிலத் தன்மை கொண்டவை. அவற்றின் pH மதிப்பு (அமிலக் காரச் சமன்பாடு) என்பது 2 pH முதல் 4 pH-க்குள் அடங்கி விடுகிறது.

இவ்வளவு குறைவான pH மதிப்பு கொண்ட இந்த பானங்கள் ரத்தத்தை அமிலத் தன்மை வாய்ந்தவையாக மாற்றுகின்றன. இதனால் ரத்தம் பாயும் குழாய்கள் உட்பட எல்லா உறுப்புகளிலும் கரைவு அரிப்பு ஏற்படுகிறது. இதனால்தான் குடிப் பழக்கம் இருப்பவர்களுக்கு நீண்ட கால உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இந்த கரைவு அரிப்பாலும் உடல் செல்களில் தங்கும் வாயு மூலக் கூறுகளாலும் உடல் செல்கள் சீக்கிரம் இறக்கின்றன. இதனாலும் உடல் உறுப்புகள் தேய்மானம் அடைகின்றன. விளைவாக வயதுக்கு மீறிய முதுமை, உடல் பருமன்,  நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், புற்று நோய் போன்ற – செல்களின் செயல்பாடுகளைப் பொறுத்து உருவாகும்– பல  நோய்கள் ஏற்படுகின்றன.

இதனால்தான் மது அருந்துவது உடலுக்கும் உயிருக்கும் கேடு போன்ற வாசங்கங்களை மது பாட்டில்களிலும் மதுக் கூடங்களிலும் இடம் பெறச் செய்கின்றனர். தவிர மதுப் பழக்கத்தால் அமிலம் நிரம்பிய ரத்தம் கொண்ட மக்களின் எண்ணிக்கை பெருகினால், பின்னாளில் அந்த அரசு மக்களுக்கான மருத்துவத்துக்காகவே  பெரும் தொகை செலவாகும் திட்டங்களைப் போட வேண்டி வரும். பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இந்த ஆல்கஹால் கலந்த பானங்கள் மற்றும் காற்றேற்றப்பட்ட பானங்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை தடுக்கும் தன்மை சில உணவுப் பொருட்களுக்கு உண்டு. அந்த ஒவ்வொரு  உணவுப் பொருட்களுக்குமான மேற்சொன்ன தீமை தடுப்புத் தன்மை  காற்றேற்ற குறைவுத்  திறன் (oxidation reduction potential) சுருக்கமாக ORP or REDOX என்ற அளவீட்டின்படி அளக்கப்படுகிறது.

இந்த ORP அளவீடு குறைவாக உள்ள பொருட்கள் உடலுக்கு தீங்கு செய்வதும் குறைவாகவே இருக்கும். இந்த ORP  300 உள்ள பானத்தைவிட  ORP 0 உள்ள பானம் நல்லது. ORP 0 என்பதைவிட ORP – 100 உள்ள பானம் இன்னும் உடலுக்கு நல்லது.

உதாரணமாக மது பானங்களின் ORP என்பது + 250 முதல்+ 350 வரை  இருக்கும். இது உடலுக்கு ஆபத்தானது. ஆனால் கிரீன் டீயின் ORP +50 முதல் +100 வரை மட்டுமே. எனவேதான் கிரீன் டீயை ஆரோக்கிய பானமாக மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். எனினும் உடல் உறுப்புகளுக்கு தீமை செய்யும் மூலக் கூறுகள் கிரீன் டீயிலும் உண்டு.

ஆனால் எங்களது கண்டுபிடிப்பான இந்த பெலிகானா டி.டி. பானத்தை எந்த மது பானத்தோடு சேர்த்தாலும் சரி அடுத்த சில நொடிகளில் அந்த மது பானம் அல்லது குளிர்பானத்தின் ORP – 50 முதல் – 100 வரை போய்விடும்.  அதாவது ஆல்கஹால் மற்றும் காற்றேட்டம் காரணமாக அந்த மது பானத்தில் இருக்கும் உடல் உறுப்புகளை அரிக்கும் தீமைத் தன்மையை மாற்றி, அந்த மதுபானத்தையே பெலிகானா டி.டி. முற்றிலும் ஆரோக்கிய பானமாக மாற்றி விடுகிறது. இது கிரீன் டீயை சாப்பிடுவதைவிட  பல மடங்கு ஆரோக்கியமானது.. மற்றும் உடலுக்கு நன்மை செய்வதுமாகும்.

காலகாலமாக, இருக்கும் மதுப் பழக்கத்தால் உலக அளவில் வீணாக்கப்படும் மனித சக்தியை அளவிடவே முடியாது. அதுவும் 25 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சக்தியை அதிகம் கொண்ட நம் இந்தியா போன்ற நாடுகளில், மதுப் பழக்கத்தால் வீணாகும் மனித சக்தி அதற்கும் மேலே.  அவர்கள் ஆக்கபூர்வமான வயதில் மது அருந்துவதால் தீய பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை இழக்கின்றனர்.

பொதுவாக தண்ணீர் சோடா, இனிப்பு குளிர்பானகள் இவற்றுடன் சேர்ந்துதான் மது அருந்தப்படுகிறது. மது வகைகளின் அமிலத் தன்மையை குறைக்கவே  அவை கலக்கப்படுகின்றன அனால் அவை  நாக்கு அளவில் மட்டுமே அந்த வேலையை செய்கின்றன.

உண்மையில்  உடல் உறுப்புகளை அரித்துக் கரைக்கும் மதுவின் 4 pH என்ற அமிலத் தன்மையில் மேற்சொன்ன கலக்கிகள் எந்த மாற்றங்களையும் செய்வது இல்லை. ஒரு நல்ல ஆரோக்கிய பானம் என்றால் அதன் pH தன்மை 7 pH முதல் 11 pH வரை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ரத்தத்தில் அமிலத் தன்மை ஏற்படாது.

தவிர இரத்தத்தின் pH அளவு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பாதுக்காப்பான அளவான 7.35 to 7.45 pH என்ற நிலையிலேயே நல்லபடியாக தொடர்ந்து இருக்கும். அப்போதுதான் மனித உடலானது பொதுவான மற்றும் தோற்று நோய்களுக்கு ஆளாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

4 pH மட்டுமே உள்ள,  அமிலத் தன்மை நிறைந்த உடலுக்கு ஆபத்தை தரும் மதுவோடு, பெலிகானா டி.டி. கலந்து அருந்தும்போது, அது மதுவின் pH அளவை 10.5 என்ற அளவுக்கு உயர்த்தி அமிலத் தன்மையை நீக்கி , உடல் உறுப்புகளை கரைத்து அழிப்பதை தடுக்கிறது.

உலக அளவில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் தண்ணீரை 6 -7 pH. என்ற அளவுக்கு மென்மைப்படுத்த சோடியம் பை கார்பனேட் என்ற வேதிப் பபொருளை பயன்படுத்துகின்றன. இதற்கு மேல தண்ணீரை மென்மைப்படுத்த வேண்டுமானால் ரசாயனப் பொருளை பல மடங்கு பயன்படுத்தவேண்டும். இது மனித உடலுக்கு நல்லதல்ல. ஒரு அளவுக்கு மேல் நம் உடலுக்குள் இவை சேர்ந்தால் அவை உடலுக்குள் தங்கி நோக்கத்துக்கு மாறாக அமிலத் தன்மையை பெருக்க ஆரம்பித்து விடும்.

அதாவது இந்த சோடியம் கார்பனேட், பை கார்பனேட் எல்லாம் தண்ணீரின் அமிலத் தன்மையை தற்காலிகமாக மட்டுமே மாற்றும். ஆக இப்படி உருவாகி வரும் தண்ணீரையோ அல்லது அந்த தண்ணீரால் உருவான சோடா முதலிய பானங்களையோ மதுவுடன் கலந்து அருந்தும்போது, மதுவால் ஏற்படும் பாதிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

இன்றைய நிலையில் நுண்ணுயிரியல் ரீதியாக, சில நாட்களுக்கு மேல் பாதுகாப்போடு இருக்கக் கூடிய குளிர்பானங்களை, தயார் செய்யு வேண்டுமானால் அதில் தண்ணீரோடு பதனப்படுத்தும் பொருட்களையோ செயற்கை உப்புகளையோ சேர்த்தால்தான் முடியும் என்ற நிலை இருக்கிறது. உடலுக்கு தீங்கு செய்யும் அந்த பொருட்கள் இன்றி தயாரிக்கும் சக்தி, இன்றைய நவீன தொழில் நுட்பங்களுக்கு கிடையவே கிடையாது.

அதே போல இவ்வளவு கெமிக்கல்களை பயன்படுத்தியும்கூட  தண்ணீரின் pH அளவை தொடர்ந்து ஒரே நிலையில் பாதுகாக்கும் திறனும் இந்தத் தொழில் நுட்பங்களுக்கும் இல்லை. தண்ணீரின் ORP  அளவை 24 முதல்  36 மணி நேரங்களுக்கு மேல்  தக்க வைக்கும் தொழில் நுட்ப அறிவும் நமக்கில்லை.

இந்த நிலையில்தான் ஆல்கஹாலின் அமிலத் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தயார் செய்யப்பட்ட பானமாக, எங்களின் கண்டுபிடிப்பான பெலிகானா D D வந்திருக்கிறது.

எந்த விதமான செயற்கைப் பொருட்களின் சேர்க்கையும் இன்றி பெலிகானா D.D. அதை சாதிக்கிறது என்பதுதான் இதில் உள்ள அதிசயம்.

எங்கள் பெலிகானா D.D.  எந்த விதமான ரசாயனங்களோ, காரத் தன்மை பொருட்களோ, பதப்படுத்தும் பொருட்களோ, ஆக்சிஜன் ஏற்றத் தடுப்பியோ இன்றி உடலுக்கு ஒரு செய்யும் கொடிய மதுவை ஓர் ஆரோக்கிய பானமாக மாற்றுகிறது .

இந்த உண்மைகள் யாவும் NABL எனப்படும் National Accreditation Board for Laboratories அமைப்பின்  அங்கீகாரம் பெற்ற — SGS குழுமம் மற்றும் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் போன்ற இன்டர்நேஷனல் மற்றும் இந்திய ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.  FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பாய் மற்றும் தரக் கழகத்தின் ( Food Safety and Standards Authority of India) மூலம் சான்றிதழும், அனுமதியும் தரப்பட்டு உள்ளன.

இந்த பெலிகானா D.D. பானத்தை தண்ணீர் போல அருந்துவதும் பாதுகாப்பானதே. மதுவோடு கலப்பதற்கு என்றுள்ள பானங்களின் குறைபாடுகளையும், பற்றாக்குறையையும் சரி செய்வதோடு மக்களுக்கு ஆரோக்கியம் அளிப்பதுவுமே இந்த பெலிகானா D.D. பானம் கண்டு பிடிக்கப்பட்டதன் நோக்கம் ஆகும் .

மிக முக்கியமான விஷயம்.. பெலிகானா டி.டி. கலந்து அருந்துவதால் மது தரும் போதை, சந்தோசம், உற்சாகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் drsundaravelu@gmail.com,  91760 77888 / 91769 97888

இதுக்காக “அதான் காப்பாத்த இன்னொரு தண்ணி வந்திருச்சே.. ஒண்ணும் ஆகாது”ன்னு நினைச்சு டாஸ்மாக் பக்கம் ஓடாதீங்க குடிமகன்களா..! எப்படியிருந்தாலும் மது ஆபத்தானது..! 

குடி குடியைக் கெடுக்கும்..!

குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு..!

Our Score