2021 புத்தாண்டில் வெளியாகும் ‘பேய் இருக்க பயமேன்’..!

2021 புத்தாண்டில் வெளியாகும் ‘பேய் இருக்க பயமேன்’..!

திலகா ஆர்ட்ஸ் சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘பேய் இருக்க பயமேன்’.

இந்தப் படத்தில் நாயகிகளாக காயத்ரி ரமா, நியதி நடித்துள்ளனர்.  முக்கியக் கதாபாத்திரங்களில் அர்ஜூன், முத்துக் காளை, நெல்லை சிவா, கோதை சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜோஸ் ஃபிராங்க்லின்,  ஒளிப்பதிவு – அபிமன்யு, படத் தொகுப்பு – ஜி.பி. கார்த்திக் ராஜா, ஒலி வடிவமைப்பு – சி.சேது, படத் தொகுப்பு, எழுத்து, இயக்கம் – கார்த்தீஸ்வரன் .

இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பாளராக பாய்ஸ்’, ‘ராவணன்’, ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’ போன்ற வெற்றி படங்களில் பணியாற்றிய C.சேது பணியாற்றியுள்ளார்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் கார்த்தீஸ்வரன் பேசும்போது, “இப்படம் பிளாக் காமெடி வகையைச் சார்ந்தது.  பேயை பார்த்து யாரும் பயப்பட கூடாது. அது நம்முடைய அடுத்த பரிமாணம் என்பதை மையக் கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த பேய் இருக்க பயமேன்’ திரைப்படம்.

இப்படம் குழந்தைகளை பெரிதும் கவரும்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் மூணாறு மற்றும் மறையூர் காட்டுப் பகுதியில்  படமாக்கப்பட்டுள்ளது. மறையூரில் காட்டிற்கு இடையில் இருக்கும் ஒரு பெரிய வீட்டில்தான் முழு படமும் படமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1 அன்று இப்படம் திரைக்கு வருகிறது…” என்றார்.

Our Score