full screen background image

“இடது கைதான் படத்தின் உண்மையான கதாநாயகன்”  ‘பீச்சாங்கை’ ஹீரோ கார்த்திக் பேச்சு..!

“இடது கைதான் படத்தின் உண்மையான கதாநாயகன்”  ‘பீச்சாங்கை’ ஹீரோ கார்த்திக் பேச்சு..!

அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி,  ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் ‘பி.ஜி.மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பீச்சாங்கை’.

‘ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்’ எனப்படும் ஒருவித குறைபாட்டை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தில்  கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

M01A2614

சமீபத்தில் வெளியான ‘பீச்சாங்கை’ படத்தின் டிரைலர்,  மிக விரைவாக 15 லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்களை யுடியூபில் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.     

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய நடிகர் கார்த்திக், “இடது கை பழக்கம் உள்ள ஒரு  பிக் பாக்கெட் திருடன் வேடத்தில் நான் இந்த ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்து இருக்கின்றேன். நான் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரத்தின் பெயர் ‘ஸ்மூது’.

5D6A9023

‘பீச்சாங்கை’ படத்தின் கதையை பொறுத்தவரை என்னுடைய இடது கைதான் உண்மையான கதாநாயகன். ஒரு பிக் பாக்கெட் திருடனை ராஜா போல வாழ வைக்கும் அவனுடைய இடது கை, ஒரு கட்டத்தில் அவனுக்கு வில்லனாக மாறுகின்றது. இதுதான் எங்களின் ‘பீச்சாங்கை’ படத்தின் ஒரு வரி கதை.

நிச்சயமாக என்னுடைய கதாபாத்திரம், எல்லா தரப்பு ரசிகர்களாலும், குறிப்பாக குழந்தைகளால் ரசிக்கப்படும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘பீச்சாங்கை படத்தின் கதாநாயகன் கார்த்திக்.

Our Score