full screen background image

‘பெடியா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது

‘பெடியா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் படம் பெடியா’.

வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த ‘பெடியா’ திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரம்மாண்டமான முறையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது

 அமர் கெளஷிக் இயக்கும் ‘பெடியா’ திரைப்படத்தின் பரபரப்பான டீசர் அனைவரின் பேசு பொருளான நிலையில், அப்படத்திலிருந்து ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த மெல்லிசை காதல் பாடலை மிகவும் சிறப்பான முறையில் கார்த்திக் பாடியுள்ளார். அழகான பாடல் வரிகளும் உணர்வுப்பூர்வமான இசையும் கேட்பவர்களை பரவசமடைய வைக்கின்றன.

‘எனக்காய் பிறந்தவளே நீயா’ பாடலை கேட்கும்போது அது எவ்வாறு படமாக்கப்பட்டிருக்கும் என்ற ஆவலும் திரையில் காண வேண்டும் என்ற ஆர்வமும் மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை.

சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை அமிதாப் பட்டாச்சாரியா மற்றும் எஸ். சுனந்தன் எழுதியுள்ளனர். பாடலின் ஒலி வடிவம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் திங்கட்கிழமை அன்று முழு பாடலும் வெளியாகிறது.

இந்த ‘பெடியா’ படம் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2-டி மற்றும் 3-டியில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வெளியிட உள்ளது.

Our Score