full screen background image

பழனி-பாப்பம்பட்டி ரூட் மினி பஸ்ஸில் நடக்கும் காதல்தான் படத்தின் கதையாம்..!

பழனி-பாப்பம்பட்டி ரூட் மினி பஸ்ஸில் நடக்கும் காதல்தான் படத்தின் கதையாம்..!

முத்தியாரா பிலிம்ஸ் சார்பாக ஆணிமுத்து தயாரித்துள்ள படம் ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’.

பழனி – பாப்பம்பட்டி ரூட்டில் செல்லும் மினி பஸ்ஸை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து காதல் கதையாகக் கொடுத்திருக்கின்றனர்.

இப்படத்தில் மினி பஸ் டிரைவராக, படத்தின் ஹீரோவாக விதார்த் நடித்துள்ளார். பஸ்ஸின் கண்டக்டராக நகைச்சுவை நடிகர் சூரியும், பஸ்ஸின் உரிமையாளராக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். கதாநாயகியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பொன்மனம்’, ‘என் உயிர் நீதானே’, ‘கார்மேகம்’, ‘என் புருசன் குழந்தை மாதிரி’, ‘அழகர் மலை’, ‘சுறா’, ‘பாக்கணும் போல இருக்கு’ போன்ற படங்களுக்கு பிறகு S.P.ராஜ்குமார் இயக்கியுள்ள படம் இது. நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள இப்படம், தணிக்கைக் குழுவினரால் பாராட்டப்பட்டு ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

பழனி, பொள்ளாச்சி, வாள்பாறை, உடுமலைப்பேட்டை, சாலக்குடி போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் படம் திரைக்கு வரவுள்ளது.

இசை – அருள் தேவ்

ஒளிப்பதிவு – டி.எம். மூவேந்தர்

படத் தொகுப்பு – கே. தணிகாசலம்

கலை – எஸ்.எஸ். மூர்த்தி

நடனம் – அஜய், சிவசங்கர், விஜய் சிவசங்கர், பாபி ஆண்டனி

சண்டைப் பயிற்சி – திலீப் சுப்புராயன்

மக்கள் தொடர்பு – நிகில்

Our Score