அவ்னி டெலிமீடியா சார்பாக திருமதி.குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி கதாநாயகனாகவும், நடிகர் ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் ‘பட்டாம் பூச்சி’.
ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.
கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய, நவநீத் சுந்தர் இசையமைக்கிறார். பென்னி ஆலிவர் படத் தொகுப்பினை மேற்கொள்கிறார். சண்டைப் பயிற்சி இயக்கம் – ராஜசேகர், திரைக்கதை – நரு. நாராயணன், மகா கீர்த்தி, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய ‘பட்டாம்பூச்சி’ எனும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘வேட்டைகள் ஆரம்பம்’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது..
நவநீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பா.விஜய் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடகர் நிவாஸ் மற்றும் நவநீத் சுந்தர் இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
பாடல் வரிகள் :
Verse 1 :
யாரோ நீ யாரோ தீய தூதனே
சாவின் ராஜாங்கம் ஆளும் தேவனே
ஈரம் இல்லாமல் கொல்லும் ஜீவனே
கண்ணில் பாதாளம் காட்டும் மாயனே
யாரோ நீ யாரோ தீய தூதனே
சாவின் ராஜாங்கம் ஆளும் தேவனே
ஈரம் இல்லாமல் கொல்லும் ஜீவனே
கண்ணில் பாதாளம் காட்டும் மாயனே
Pre chorus 1:
கெஞ்சிக் கேட்டால் கொஞ்சிக் கொஞ்சி
கொன்று தீர்ப்பான் இந்த நல்லவன்
மூச்சில்லாமல் பேச்சில்லாமல்
மேலே சேர்ப்பதில் மேதையானவன்
Chorus:
வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
யாரிவன் கோட்டைக்குள் போனாலும்
மண்ணோடு மண்ணாகும் பேரின்பம்
வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
மூச்செல்லாம் பேச்செல்லாம் நின்றாலும்
மொத்தத்தில் உள்ளத்தில் சந்தோஷம்
ஆ….









