full screen background image

‘பதுங்கி பாயணும் தல’ படத்தின் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்

‘பதுங்கி பாயணும் தல’ படத்தின் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்

MEDIA PASSION PRODUCTIONS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் AMEENA HUSSAIN  தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பதுங்கி பாயணும் தல’.

இந்தப் படத்தில் மைக்கேல் ஹீரோவாகவும், நைனிகா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், வேலராமமூர்த்தி, சிங்கம் புலி, M.S.பாஸ்கர், ஆர்.என்.ஆர்.மனோகர், ராகுல் தாத்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.ஏ.ரெளவின் பாஸ்கர், இசை – வல்லவன் சந்திரசேகர், படத் தொகுப்பு – டி.மனோஜ், பாடல்கள் – ஞானகரவேல், மோசஸ் முத்துப்பாண்டி, நடனம் – மாஸ்டர் நோபல், பாபா பாஸ்கர், பாபி ஆண்டனி, கேசவ், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், கலை இயக்கம் – ரவிஸ், டிஸைன் – சிந்து கிராபிக்ஸ், மக்கள் தொடர்பு – வின்சன், எழுத்து, இயக்கம் – S.P.மோசஸ் முத்துப்பாண்டி.

இந்தப் படத்தில் ‘நீ மாமனா மச்சானா’ என்ற பாடலை படத்தின் இயக்குநரான S.P.மோசஸ் முத்துப்பாண்டியே எழுதியிருக்கிறார். வல்லவன் சந்திரசேகர் இசையில் பாடகர் அந்தோணி தாஸ் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் SINGLE TRACK-ஐ ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். பாடல் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது. இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும்..” என்று வாழ்த்தியுள்ளார். 

Our Score