விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள’ அக்டோபர் 21 ரிலீஸ்..!

விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள’ அக்டோபர் 21 ரிலீஸ்..!

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், இயக்குநர் முருகதாஸும் இணைந்து தங்களது நான்காவது தயாரிப்பான ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி உலகெங்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா ஹீரோயின். மேலும் பசுபதி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்து, எழுதி, இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

pathu enradhukulla-1

ஜனரஞ்சகமான முறையில் அனைவரையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டு உள்ள இந்த ‘பத்து எண்ரதுக்குள்ள’ படத்தின்  கடைசிக்கட்ட படப்பிடிப்பு  இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.

‘கோலிசோடா’வின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு வரும் விஜய் மில்டனின் படம் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. 

சமீபத்தில் வெளி வந்து வர்த்தக ரீதியாக மட்டுமின்றி, அனைவராலும் பாராட்டையும் பெற்ற ‘காக்க முட்டை’ பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தாரின் பெருமிதமான வெளியீடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு இயக்குநர் முருகதாஸ் இணைந்து வழங்கிய ‘ராஜா ராணி’ மற்றும் ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்கள் பெற்ற வெற்றியை இந்தப் படமும் பெரும் என்பது  நிச்சயம். 

‘ஐ’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெளிவரும் சியான் விக்ரமின் படம் இது என்பதால் அவரது ரசிகர்களிடையே இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு  காத்திருக்கிறது. ‘கத்தி’  படத்துக்கு பிறகு வரும் படம் என்பதால் சமந்தாவுக்கும்  இந்த படம் வெற்றிப் படமாக அமையும். 

இந்த நிலையில் நவராத்திரி பண்டிகை நேரத்தில்  இந்தப் படம் வெளியாகவுள்ளது ரசிகர்கள் இடையே பெரிதும் உற்சாகத்தை தூண்டி உள்ளது. அக்டோபர் 21-ம் தேதி வெளிவர உள்ள இந்தப் படம் அனைத்து  தரப்பினரையும் நிச்சயம் கவரும்..” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர்.

Our Score