‘பார்ட்டி’, ‘சார்லி சாப்ளின்-2’ படங்களின் தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்றிய சன் டிவி..!

‘பார்ட்டி’, ‘சார்லி சாப்ளின்-2’ படங்களின் தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்றிய சன் டிவி..!

 அம்மா கிரியேசன்ஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.சிவா மிகப் பிரமாண்டமான செலவில் தயாரித்துக் கொண்டிருக்கும் ‘பார்ட்டி’, ‘சார்லி சாப்ளின்-2’  ஆகிய இரண்டு படங்களின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் ‘பார்ட்டி’ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருப்பதாலும் இயக்குநரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் இத்திரைப்படம் கணிசமான அளவுக்கான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதேபோல் இன்னொரு படமான ‘சார்லி சாப்ளின்-2’  படமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது. காரணம், இத்திரைப்படத்தின் இயக்குநரான ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தில் நடித்த அதே பிரபுதேவா, பிரபு  உட்பட பல நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகிறார்கள் என்பதுதான்.

 அது மட்டுமில்லாமல் கமர்ஷியல் இயக்குநராக உலகம் அறிந்தவர் ஷக்தி சிதம்பரம். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள்  அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

இதனாலேயே இந்த இரண்டு படங்களின் தொலைக்காட்சி உரிமையை பலத்த போட்டிகளுக்கிடையே சன் டிவி கைப்பற்றியுள்ளதாம்.

 இதனால் ‘பார்ட்டி’, ‘சார்லி சாப்ளின்-2’ படக் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Our Score