நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தனது அடுத்த படமான கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் எடிட்டரான சுதர்சனை தான்தான் முறையாக அறிமுகம் செய்து வைப்பதாக வெளியிட்டிருந்த அழைப்பிதழ் பிரச்சினையானதை பற்றி இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.
எடிட்டர் சுதர்சன் அறிமுகமான ‘அமைதிப்படை இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ.’ என்ற படத்தைத் தயாரித்த வி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இது குறித்து பார்த்திபனுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இப்போது அது குறித்து தனக்கே உரித்தான பாணியில் சின்ன நக்கல்களுடன் அறிக்கையை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அது இங்கே :
இதிலேயே மீண்டும் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை வைத்து கிண்டல் செய்திருக்கும் இயக்குநர் பார்த்திபனை என்னவென்று சொல்வது..?
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாவது இப்படியொரு அறிக்கை விடுவதற்கு முன்பாக பார்த்திபனிடமே பேசி தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கலாம்.. எல்லாரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்தான்.. பேசாமலேயே.. கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் இருந்து கொண்டு மோதல் மட்டும் எதற்கு..?
என்னவோ போடா மாதவா..!!!