லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படம்

லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படம்

பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் ‘பன்னிக்குட்டி’.

இந்தப் படத்தினை ‘கிருமி’ படத்தை இயக்கிய இயக்குநரான அனுசரண் முருகையா  இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

panni kutty 6sht chase posterb

ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N.R. சுகுமாரன், படத் தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்கிறார்.

‘ஆண்டவன் கட்டளை’, ‘49-0’, ‘கிருமி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘கிருமி’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் அனுசரனுடன் இணைந்துள்ளார்.

இயக்கம் – அனுசரண் முருகையன், கதை – ரவி முருகையன், திரைக்கதை – M. மணிகண்டன், அனுசரண், ரவி முருகையா, தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ், சண்டை பயிற்சி – ‘FIRE’ கார்த்திக், தயாரிப்பு மேலாளர் – M .சிவகுமார், ஒப்பனை-P S.சந்திரசேகர், கிரியேட்டிவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள் – சமீர் பரத் ராம்(SUPER TALKIES), M.மணிகண்டன் ( TRIBAL ARTS), மக்கள் தொடர்பு – ரியாஸ் கே. அகமது.

Our Score