ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி.ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாண்டிய வம்சம்.’
இந்த ‘பாண்டிய வம்சம்’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி நாயகனாகவும் நடித்து, இயக்கியுள்ளார் ஏ.சிவபிரகாஷ். இதில் நாயகியாக ரக்ஷிதா பானு மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர். முழு நீள வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜயகுமார், போஸ் வெங்கட் மற்றும் ‘குட்டி புலி’ சரவணன் சக்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – கண்ணதாசன் செழியன், படத் தொகுப்பு – மாதவன், பத்திரிகை தொடர்பு – கே.எஸ்.கே.செல்வா.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் ஏ.சிவப்பிரகாஷ் பேசும்போது, “இப்படம் கிராமங்களில் நிழவி வரும் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது இந்த சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம்…” என்றார்.
இத்திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவரான டாக்டர்.பி.வி.கதிரவன் வெளியிட்டார்.









