full screen background image

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’

இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப்படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்கமான திகில் படங்களாகவே இருக்கிறது.

உண்மையில், ‘சூப்பர் நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும்வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக தற்போது உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷ்ரம்’ திரைப்படம் சூப்பர் நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக இருக்கும்.

பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக தயாரிப்பாளர் வைரமுத்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’, ‘சந்திரமௌலி’  மற்றும் ‘பொது நலம் கருதி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும், கோகுல்(சென்னை டூ சிங்கப்பூர், ஜாக் அண்டு ஜில் புகழ்), அஸ்வின் ஜெரோம் (யானும் தீயவன், நட்பே துணை புகழ்), மது ஷாலினி(அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி), சனா அல்தாஃப்(சென்னை 28 – 2, ஆர்.கே.நகர்), சீமான், ராஜா மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – பாரடாக்ஸ் புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – வைரமுத்து, இயக்குநர் – பாலாஜி வைரமுத்து, ஒளிப்பதிவு – யுவா, இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத் தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்கம் – சசிகுமார், சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், நடன இயக்கம் – விஜி, நிர்வாகத் தயாரிப்பு – தர்மராஜ் மாணிக்கம், இணை தயாரிப்பு – மதுசூதனன், ஒலி வடிவமைப்பு – ஹைம்ன் ஸ்டூடியோஸ், புகைப்படங்கள் – மணியன், உடைகள் – வேலவன், உடை வடிவமைப்பு – பிரசன்னா லட்சுமி, மக்கள் தொடர்பு – தர்மா.

‘பஞ்சராக்ஷரம்’ என்னும் தலைப்பு குறிப்பிடுவதுபோல, படத்தில் இடம் பெற்றிருக்கும் 5 முக்கியக் கதாபாத்திரங்களின் கேரக்டர் ஸ்கெட்ச் இயற்கையின் 5 வெவ்வேறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஐதன்(தீ) ஒரு ஆர்வமுள்ள இசைக் கலைஞர், சமீரா(காற்று) ஒரு அறிவுசார் எழுத்தாளர், ஜீவிகா(நீர்) ஒரு உன்னத மனிதாபிமானி, தர்ணா(பூமி) ஒரு ஆர்வமுள்ள பந்தய வீரர் மற்றும் திஷ்யந்த்(வானம்) ஒரு உற்சாகமான ஆராய்ச்சியாளர்.

இந்த கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானதும் அவர்களுக்குள் நல்ல பிணைப்பு ஏற்படுகின்றது. அவர்கள் ஒன்றாக ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது, ஒரு புத்தகத்திலிருந்து ஒரு விளையாட்டை சமீரா பரிந்துரைக்கும்வரை விஷயங்கள் நன்றாகவே இருக்கிறது.

நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக எனத் தொடங்கும் விஷயம் விரைவில் அனைவரையும் நம்ப முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.

படத்தின் கதைக் களம் மிகவும் விதிவிலக்காகவும் தனித்துவமாகவும் காணப்பட்டாலும், இது இந்திய திரைப்படத் துறையில் முதல் முறையாக எழுதப்பட்ட  பல வகைகளின் தொகுப்பாகும். இது ஒரு உளவியல் சூப்பர் நேச்சுரல் சாகச த்ரில்லர் திரைப்படமாக இருக்கும்.

கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.

இந்த ‘பஞ்சராக்ஷ்ரம்’ நேரடி கார் ஃபிளிப் ஸ்டண்ட் இடம் பெறும் முதல் இந்திய திரைப்படமாகவும் இருக்கும். இசைக் கலைஞருடன், சிறப்பாக அமைத்த மேடை விளக்குகளில் குழு லைவ்-இன் கச்சேரியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளது.

இந்தப் படத்திற்காக 75 வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒரு பைக் மற்றும் பல கார்களின் துரத்தல்கள் என்று மூச்சடைக்கக் கூடிய அதிரடி காட்சிகள்  பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் இசை வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உலகளவில் வரும் டிசம்பர் 27, 2019 அன்று வெளியிடப்படும்.

Our Score