full screen background image

‘பாக்கணும் போல இருக்கு’ எப்போதான் வரும்..?

‘பாக்கணும் போல இருக்கு’ எப்போதான் வரும்..?

‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘இருவர் உள்ளம்’, ‘தொட்டால் தொடரும்’, பாக்கணும் போல இருக்கு’ ஆகிய 5 படங்களை தயாரித்துள்ள எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், தான் தயாரிக்கும் 6-வது படத்தின் பாடல் காட்சிகளை ஆஸ்திரேலியாவில் படமாக்கவுள்ளார்.

துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கணும் போல இருக்கு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பரதன் ஹீரோவாகவும், அன்சிபா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சூரி, கஞ்சா கருப்பு, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள காமெடி காட்சிகள் படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.

மேலும், பிரபல மும்பை மாடல் அழகி பூஜா என்பவர் இப்படத்தில் குத்துப் பாடலுக்கு  நடனமாடியுள்ளார். அருள்தேவ் இசையையில் ‘குப்பம்மா மகளே… குப்பம்மா மகளே… எப்பம்மா வச்சிக்களாம்…’ என்ற பாடலுக்கு, பூஜா போட்டியிருக்கும் கவர்ச்சி குத்தாட்டம் ரசிகர்களையும் ஆட்டம் போட வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

thuvaar g.chandrasekar

இதுவரை தயாரிப்பாளராக மட்டுமே சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்த துவார் ஜி.சந்திரசேகர், ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் மூலம் இனி நடிகராகவும் தனது சினிமா பயணத்தை தொடர்கிறார். இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள அவர், தொடர்ந்து படங்களை தயாரிப்பதுடன், நடிப்பிலும் கவனம் செலுத்த உள்ளார்.

விரைவில் வெளியாக உள்ள ’பாக்கணும் போல இருக்கு’ படத்திற்கு பிறகு தான் தயாரிக்கும் புது படத்தின் பாடல் காட்சிகளை ஆஸ்திரேலியாவில் படமாக்கவுள்ளார் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்.

Our Score