விக்ரம் பிரபு  ஜோடியாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கும் ‘பக்கா’ திரைப்படம்

விக்ரம் பிரபு  ஜோடியாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கும் ‘பக்கா’ திரைப்படம்

‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார்  அடுத்து  மிகப் பிரமாண்டமான செலவில் தயாரிக்கும் படம் ‘பக்கா.’

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு  பிறகு பிந்து மாதவியும் இந்த படத்தில் இன்னொரு  நாயகியாக நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சரவணன், இசை – C.சத்யா, பாடல்கள் – யுகபாரதி, கலை – கதிர், நடனம் –  தினேஷ், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், படத் தொகுப்பு – சசி, தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார், தயாரிப்பு  –  T.சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  S.S.சூர்யா.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

 

Our Score