“காசு, பணம், துட்டு, மணி, மணி..!!” என்ற வரிகளுக்கேற்ப இன்றைய கால சூழ்நிலை மாறி வருகிறது(இல்லை) மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான் மிஞ்சும் என்பதைச் சொல்லும்வகையில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘பைசா’.
இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை சிறுவர்களை மையமாக கொண்ட ‘கோலி சோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ வரிசையில் இந்த திரைப்படமும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பசங்க’, ‘கோலி சோடா’ புகழ் ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை Confident பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ், RK ட்ரீம் வேர்ல்ட் மற்றும் இணை தயாரிப்பாளர் கராத்தே K.ஆனந்த் ஆகியோர் சேர்ந்து தயாரித்துள்ளனர். மேலும் சாய்ராம், நாசர், ராஜசிம்மன், சென்றாயன், மதுசூதனன், ராம்ராஜ், ஆரா, தீபிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வேல்முருகன், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, இசை – ஜெ.வி., பாடல்கள் – நா.முத்துக்குமார், நடன அமைப்பு – பாபா பாஸ்கர், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா. தயாரிப்பு – அப்துல் மஜித், ரங்கநாதன் ராஜூ, கண்ணன் பாஸ்கர், இணை தயாரிப்பு – கராத்தே கே.ஆனந்த், எழுத்து, இயக்கம் – அப்துல் மஜித்.
“என்னுடைய கதையம்சம் முழுக்க முழுக்க நிஜ வாழ்க்கை அனுவங்களை சார்ந்ததாகத்தான் இருக்கும். ஒரு சராசரி சினிமாவாசியின் மனதில் இந்த திரைப்படம் இடம் பெற்றால்தான், என்னால் அதை முழுமையான வெற்றியாக உணர முடியும்…” என்கிறார் இயக்குநர் அப்துல் மஜீத்.










