‘துருவங்கள் 16’ படத்தை தொடர்ந்து ரகுமானின் அடுத்த படம் ‘பகடி ஆட்டம்’

‘துருவங்கள் 16’ படத்தை தொடர்ந்து ரகுமானின் அடுத்த படம் ‘பகடி ஆட்டம்’

நடிகர் ரகுமானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘துருவங்கள் 16’. இப்படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதில் ரகுமானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.  குறிப்பாக பத்திரிகையாளர்களும்,  ஊடகங்களும்,  இணையத் தளங்களும்  ரகுமானின் நடிப்பை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து ரகுமானின்  நடிப்பில்  ‘பகடி ஆட்டம்’  என்கிற படம் வெளியாகவுள்ளது. இதிலும் ரகுமான் ஒரு துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Marram Movies  மற்றும்  Bharani Movie  பெருமையுடன் வழங்கும்  இந்த ‘பகடி ஆட்டம்’  படத்தை குமார், டி.எஸ்.கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ்,  ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை புதிய இயக்குநரான ராம் கே.சந்திரன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில்தான் ரகுமான் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 7 மணியளவில் இயக்குநர் பாண்டிராஜ் வெளியிடுகிறார்.

V.T நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது.

Our Score