வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிட் ஆகிய இரு பட நிறுவனங்களும் இணைத்து தயாரிக்கும் படம் ‘பகடை பகடை.’
இந்த படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாகவும் சிறுவனாகவும் பல டங்களில் நடித்தவர். ‘ஜெயம்’ படத்தின், தமிழ், தெலுங்கு இரு மொழிப் பதிப்பிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ‘கோவலனின் காதலி’, மற்றும் திரைக்கு வர உள்ள ‘திருப்புகழ்’, ‘மையம் கொண்டேன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். ரிச்சு என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் கோவை சரளா, இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து, சங்கர், கனகப்ரியா, முத்துக்காளை ஆகியோர் நடிதிருகிறார்கள்.
ஒளிப்பதிவு – Y.முரளி
இசை – ராம்ஜி – A.C. ஜான்பீட்டர்
பாடல்கள் – தமிழமுதன், பால்முகில்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
வசனம் – வி.பிரபாகர்
கலை – P.A.ஆனந்த், நடனம் – யாசின்
ஸ்டண்ட் – டைகர்பாபு
தயாரிப்பு நிர்வாகம் – ஸ்ரீதர்
தயாரிப்பு மேற்பார்வை – முத்தையா
கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் சசிசங்கர்…
இவர் ஏற்கெனவே சூர்யா, ஜோதிகா நடிப்பில் உருவான ‘பேரழகன்’ படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் சசிசங்கர் கூறும்போது, “படத்தின் பாடல் காட்சிகள் மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. ‘மாறுதே மாறுதே – என் சூழல் மாறுதே’ என்ற பாடல் காட்சியில் திலீப்குமார் – திவ்யாசிங் பங்கேற்க கோவாவில் யாசின் நடன அமைப்பில் படமாகப்பட்டது. ‘மண் வாசமே மனச கோணுதே’ என்ற பாடல் காட்சி பொள்ளாச்சியில் திலீப்குமார், கோவைசரளா, திவ்யாசிங், சிங்கமுத்து, இளவரசு ஆகியோர் பங்கேற்க படமாக்கப்பட்டது. ‘பகாடியா பகாடியா சேல கட்டி வந்த பகாடியா’ என்ற பாடல் காட்சி ஹைதராபாத்தில் திலீப்குமார் – ரிச்சு பங்கேற்க படமாகப்பட்டது. இளமையான காதல் கதையாக பகடை பகடை உருவாகி இருக்கிறது…” என்றார்.