சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..!

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..!

டிஜி திங்க் மீடியா  ஒர்க்ஸ் நிறுவனமும், விண்மீன்கள் பட நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பச்சை விளக்கு’.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் ஆதிக் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா ஆகியோருடன்  மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து, நடித்தும் இருக்கிறார்.

Pachai vilakku Maran 4

இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, இயக்குநர் டாக்டர் மாறன் ஆகியோர் எழுதி உள்ளனர். பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர் மாறன். 

இயக்குநர் டாக்டர் மாறன், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தில் பி.எச்.டி. (Ph.D) படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவருடைய சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி பொதுமக்கள் பலன் அமையும்வகையில் சுவாரஸ்யமாக இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து படமாக்கி உள்ளார்.

Pachai vilakku Maran 3

திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டயம் பெற்றுள்ள மாறன், ஏற்கெனவே ‘இனிய பயணம்’, ‘பொன்னான நேரம்’ என இரு குறும் படங்களை இயக்கி உள்ளார்.

இந்தப் படம் காதலுடன் சாலை பாதுகாப்பையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பிறந்த எவரும் சாலைகளில்  பயணிக்காமல் இருக்க முடியாது. அப்படி சாலைகளைப் பயன்படுத்தும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுவராஸ்யமான படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் டாக்டர் மாறன்.

Pachai vilakku still 2

“காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாக இந்தப் படம் உருவாகி உள்ளது. காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அனைத்துப் படங்களிலிருந்தும் வேறுபட்டு, புதுமையான ஒரு கதையுடன் இந்தப் படம் உருவாகியிருக்கிறது..” என்கிறார் இயக்குநர் டாக்டர் மாறன். 

இமான் அண்ணாச்சிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி இருப்பது இத்திரைப்படத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

Pachai vilakku

மேலும் மனோபாலாவின் காமெடியும் சிறப்பாக அமைந்து உள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.

மிக விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.