‘லிங்கா’வினால் ‘பாயும் புலி’ படத்திற்குச் சிக்கல்..?

‘லிங்கா’வினால் ‘பாயும் புலி’ படத்திற்குச் சிக்கல்..?

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். இது சினிமாத் துறையினருக்குத்தான் அதிகம் பொருந்தும்.

ஒரு திரைப்படத்தின் நஷ்டத் தொகையை அத்திரைப்படத்துடன் சம்பந்தமுடையவர்களின் அடுத்த படத்தில் வசூல் செய்வது, விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களின் வாடிக்கையான வழக்கம்.

‘லிங்கா’ திரைப்படத்தின் நஷ்ட ஈட்டு விவகாரம் இன்னமும் இழுபறியாகத்தான் இருக்கிறது. முடிந்தபாடில்லை.

படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களில் சிலருக்கு பணம் கிடைத்துவிட்டது. எம்.ஜி. அடிப்படையில் வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லையாம்.

இதனால், வாங்கித் தர வேண்டிய பெரிய விநியோகஸ்தரான வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் புதிய படமான ‘பாயும் புலி’ படத்திற்கெதிராக தியேட்டர் உரிமையாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்களாம்..!

‘லிங்கா’ படத்தின் நஷ்டஈட்டை கொடுத்தால்தான் ‘பாயும் புலி’ தியேட்டருக்கு வரும் என்று கண்டிப்பு காட்டுகிறார்களாம்.

நடிகர் விஷாலிடம் இது குறித்து கேட்டபோது, “எனக்கும் இப்போதுதான் இந்த விஷயம் தெரிந்தது. நான் ஒரு நடிகன். நடித்துக் கொடுத்துவிட்டேன். அதோடு என் வேலை முடிந்துவிட்டது. மற்ற பிரச்சினைகளெல்லாம் தயாரிப்பாளருடையது. அவரைத்தான் கேட்க வேண்டும்..” என்று சொல்லி எஸ்கேப்பாகிவிட்டார்.

இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வேந்தர் மூவிஸ் எதையாவது செய்தாவது ‘பாயும் புலி’யை ரிலீஸ் செய்வார்கள் என்று திரையுலகத்தினர் நம்புகின்றனர்.

Our Score