full screen background image

விக்ரம் பிரபு-வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம்..!

விக்ரம் பிரபு-வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம்..!

நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது SP சினிமாஸ் நிறுவனம்.

அந்த வகையில்தான்  தனது அடுத்தப் படமாக பாயும் ஒளி  நீ எனக்கு’ படத்தை SP சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்தப் படத்தைத் தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அறிமுக இயக்குநரான கார்த்திக் அத்வைத்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மேலும் இந்தப் படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கன்னட திரைத்துறையின் மிகவும் பிரபலமான நடிகரான டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன.

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்கில்  பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத் தொகுப்பை கவனிக்கிறார். 

இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் இயக்குராக அறிமுகமாகிறார்.

கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப் படிப்பிற்குப் பிறகு, இயக்குநர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார்.

கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது.

பிரமாதமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத் தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.

இந்தப் படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல்’  என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

Our Score