“எனக்கு வீட்ல பொண்ணு பார்த்துக்கிட்டிருக்காங்க…” என்று ஆர்யா என்னதான் சவுண்ட் ஸ்பீக்கர் வைத்து கரடியாய் கத்தினாலும் அதே இங்கே யாரும் நம்பப் போவதில்லைதான்.. இது ஆர்யாவுக்கே தெரியுமென்றாலும், அவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றாலே மீடியாவின் கண்களுக்கு பெரிசாகத்தான் தெரியும்..!
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தான் தற்போது கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் புதுமுகங்கள் லீடிங் ரோல்களில் நடிக்க விஜய் சேதுபதி, ஆர்யா, அமலாபால் என்று முன்னணி நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் வந்துட்டுப் போறது என்கிற கணக்கில் அழைத்து நடிக்க வைத்திருக்கிறாராம்.
கொஞ்ச நேரம் என்றாலும் படத்துக்கே திருஷ்டி போடுவதுபோல மார்க்கெட்டிங் தந்திரத்தையும் இவர்களையே வைத்தே செய்திருக்கிறார் பார்த்திபன்.
சமீபத்தில் கோவையில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஆர்யாவுக்கும், அமலாபாலுக்கும் திருமணம் நடப்பதுபோல ஒரு காட்சியை எடுத்து அதனை ஒரேயொரு பிட்டு நியூஸாக பரப்பிவிட்டார்.. அது அன்றைக்கே பத்திக் கொண்டது.
அதெல்லாம் ச்சும்மா பட விளம்பரத்துக்குத்தான்.. ஏற்கெனவே ராஜா ராணி படத்தப்போ ஆர்யா-நயன்தாரா கல்யாணம்ன்னு சொல்லி போட்டோக்களை வெளில விடலையா..? அது மாதிரிதான் இதுவும்.. ரிலீஸ் நேரத்துல இப்படியெல்லாம் எடுத்துவிட்டாத்தான் இப்படியொரு படம் தயாராகி வருதுன்றதே ரசிகர்களுக்குத் தெரியும் என்கிறார்கள் சினிமாக்காரர்கள்.. அப்போ இதையெல்லாம் கவனிக்காத அளவுக்கு தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு வேறு வேலைகள் குவிந்து கிடக்கின்றன என்பதும் உண்மைதானே..?
“இந்தப் படத்தில் கதையே இல்லை. வெறும் திரைக்கதை மட்டுமே. சத்தியமா நான் இந்தப் படத்துல நடிக்கலை. வெறும் இயக்குநர் பணி மட்டுமே என்னுடையது..” என்று சொல்லியிருக்கும் பார்த்திபன்.. படத்தின் பூஜை நிகழ்ச்சியில் இருந்து, பிரஸ் மீட்வரையிலும் அனைத்தையும் வித்தியாசமாகவே செய்து வருகிறார்.
இந்த ஆர்யா-அமலாபால் கல்யாண விஷயமும் இப்படியொரு வித்தியாசமான சினிமா விளம்பரத்துக்குத்தான் என்கிறார். இவர் எதையும் செய்வார்.. ஏனெனில் இவர்தான் புதுமைப்பித்தனாச்சே..?!