ஃபேஸ் 2 ஃபேஸ் புரொடஷன் சார்பில் k.முருகேசன் ‘பாண்டியும் சகாக்களும்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தை அப்பு.k.சாமி கதை, வசனம், திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
ரவுடியாக ஆசைப்படும் மதுரையைச் சுற்றியுள்ள இளைஞர்களைப் பற்றிய காமெடி கலந்த கதைதான் இந்தப் படம்.
கதாநாயகனாக புதுமுகங்கள் Y.G. யுவா மற்றும் கதாநாயகியாக பூர்ணிமா நடித்துள்ளனர். I. பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தம்புராஜ் இசையமைத்துள்ளார். P.G. வேல் படத் தொகுப்பு செய்துள்ளார். அண்ணாமலை இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். சின்னப்பொண்ணு மற்றும் வேல்முருகன் பாடல்களைப் பாடியுள்ளனர்.
படப்பிடிப்பு மதுரையை சுற்றிய பகுதிகளிலும், மேலூர், திருச்சி, ராமநாதபுரம், மற்றும் ஆந்திரா ஆகிய இடங்களிலும் நடந்துள்ளது.