‘பாம்பு சட்டை’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது..!

‘பாம்பு சட்டை’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது..!

பாபி  சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கும்  ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

IMG_5480 

R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம்  மற்றும் இயக்குநர்-தயாரிப்பாளரான மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன. ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பின்பு மனோபாலா தயாரிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் ‘தாமிரபரணி’ புகழ் முக்தா பானு, சார்லி , K ராஜன், சோமசுந்தரம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், RV  உதயகுமார், சரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திjருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – K.G. வெங்கடேஷ், இசை – அஜீஷ் அசோக், பாடல்கள் – கவிப்பேர்ரசு வைரமுத்து, யுகபாரதி, விவேகா, படத்தொகுப்பு – ராஜா சேதுபதி, வசனம் ஆதவன், கலை இயக்குனர் பாண்டியராஜ்,   நடனம – பிருந்தா, சண்டை-  ‘பில்லா’ ஜகன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, புகைப்படம் – ‘Stills’ ரவி, டிசைனர்- ஹெபின், தயாரிப்பு மேற்பார்வை – பாலகோபி, தயாரிப்பு -R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன்

IMG_5963_1

‘பாம்பு சட்டை’  படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. படத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிப்பதற்கு உதவியாக இருந்த அத்தனை கலைஞர்களுக்கும்,  தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இப்போது  பின்பணி வேலைகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும்..” என்றார் அறிமுக இளம் இயக்குநரான ஆடம் தாசன்.

Our Score