அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரித்துள்ள திரைப்படம் “P- 2”.
கன்னடம், தெலுங்கு மொழிகளில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் இந்தப் படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமாகிறார். சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா தர்சன், அஜெய், ரமேஷ், சந்தோஷ் மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனார்.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – சிவம், இசை – ‘தேனிசை தென்றல்’ தேவா, ஒளிப்பதிவு S.R.வெற்றி, பாடல்கள் – சினேகன், படத்தொகுப்பு – மாதவன், சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், நடன இயக்கம் – ராதிகா, ஜானி, பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன்.
படு பயங்கரமான ஹாரர் மற்றும் திரில்லருடன் விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல பாடலாசிரியர் சினேகன் இன்று வெளியிட்டார்.









