full screen background image

கவுண்டமணியின் ‘ஒத்த வீட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

கவுண்டமணியின் ‘ஒத்த வீட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபுவின் நடிப்பில் உருவாகும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்தது.

கவுண்டமணி அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குநர் சாய் ராஜகோபால், குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இதை இயக்கியிருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது. பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இந்தப் படத்தில் கவுண்டமணி, யோகி பாபு, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், C.ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுண்டமணியின் மனைவியாக ராஜேஸ்வரி நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி & பிந்து, மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா, நாகேஷின் பேரன்- கஜேஷ் & அபர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். 

இது தவிர, சிங்கமுத்து, தாரணி, ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகாஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குநர் சாய் ராஜகோபால் டி.எஸ்.ஆர்.சீனிவாசன், சென்றாயன், கூல் சுரேஷ், சதீஷ் மோகன், காதல் சுகுமார், சிசர் மனோகர், ஆதேஷ் பாலா, மங்கி ரவி, பெஞ்சமின், கொட்டாச்சி, விஜய கணேஷ், “லொள்ளு” பழனியப்பன், நளினி சாமிநாதன் மணவை பொன் மாணிக்கம், பத்மநாபன், குணாஜி, காஞ்சிபுரம் பாய், கண்ணதாசன், மதுரநாயகம் “போண்டா”மணி, சின்ராசு, அனுமோகன், ரேவதி, மணிமேகலை, RDS சுதாகர், மற்றும் மதுரை நண்பேண்டா அட்மின் டெம்பிள் சிட்டி குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் – ஹெக்டர் ஸ்ரீதர்,  கலை இயக்கம் – மகேஷ் நம்பி, படத் தொகுப்பு – ராஜா சேதுபதி, புரொடக்ஷன் மேனேஜர் – ராஜன், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன், ஸ்டில்ஸ் – விஜய், இணை தயாரிப்பு : திரு.கோவை லட்சுமி ராஜன்.

இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Our Score