‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படத்தின் துவக்க விழா..!

‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படத்தின் துவக்க விழா..!

இயக்குனர் ஸ்ரீகாந்த் நடித்த "பாகன்" படத்தினை இயக்கிய அஸ்லம் தயாரிப்பாளராகிறார். இவர் தன்னுடைய ஃபிலிம் பாக்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் 'ஒரு குப்பைக் கதை.' இப்படத்தின் துவக்க விழாவில் பிரபல இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று லாயிட்ஸ் காலனியில் தொடங்கியது. நடிகர் ஸ்ரீகாந்த் காமிராவை முடுக்க இயக்குனர் அமீர் கிளாப் போர்டு அடிக்க.. இயக்குனர் ஜனநாதன் 'ஸ்டார்ட்', 'கட்' சொல்ல.. இனிதே படப்பிடிப்பு தொடங்கியது.

இயக்குனர் சுசீந்திரன் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான், அஷ்வின் ஸ்டுடியோஸ் சுந்தர் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.​

அதன் புகைப்படங்கள் இங்கே :