விதார்த் நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

விதார்த் நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

உலக அளவில் பிரமாண்டமான, அதே நேரம் தரமான படங்களை தயாரித்த அனுபவமுள்ள ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியா நிறுவனம், இப்போது தமிழில் தங்களது வியாபாரத்தை மேலும் முன்னெடுக்க முனைந்துள்ளது.

தென்னகத்தில் குறிப்பாக தமிழில் தங்களது தயாரிப்பு நிறுவனத்தை சீரிய முறையில் நிர்மானிக்க இருக்கும் ஈராஸ் நிறுவனம், தயாரிப்பு நிர்மானம்,  வடிவமைப்பு, விளம்பர யுத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சீரிய முறையில் ஒரு சிறந்த நிர்வாகத்தின் கீழ் இயங்க ஆரம்பித்து உள்ளது.

அதன் ஒரு பகுதியாக ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்கிற வித்தியாசமான தலைப்பு கொண்ட திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

IMG_9689

நமது கலாச்சாரத்தின் முக்கியமான  குறிப்பேடுகளை மையப்படுத்தி தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் விதார்த் நடித்துள்ளார். ‘மைனா’, ‘வீரம்’, ‘ஆள்’,  தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘குற்றமே தண்டனை’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ஒரு கிடாயின் கருணை மனு’  என்கிற இந்தப் படத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் விதார்த் ஜோடியாக பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு – ஆர்.வி.சரண், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – ரகுராமன், கலை இயக்கம் – டி.கிராபோர்டு, தயாரிப்பு – ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியோ லிமிடெட், இணை தயாரிப்பு – ஆர்.வி.பிலிம்ஸ், இயக்கம் சுரேஷ் சங்கையா. அருப்புக்கோட்டையில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

IMG_9623

இந்தப் படம் பற்றி ஈராஸ் நிறுவனத்தின் தென்னகப் பிரிவின் துணைத் தலைவரான சாகர் அத்வானி பேசும்போது, “தற்போது  நாங்கள் பிராந்திய மொழிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். வித்தியாசமான கதைக் களனை தேர்ந்தெடுத்து நிறைய திறமைசாலிகளை அறிமுகப்படுத்தி எங்கள் நிறுவனத்துக்கென்றே ஒரு தனிப் பெயரை ஈட்ட  முடிவு செய்தது உள்ளோம்.

அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு, அந்தந்த வட்டாரத்தின் கலாச்சாரம் சார்ந்த கதைகளைத்தான் நாங்கள் தேடி வருகிறோம். அப்படிப்பட்ட ஒரு தேடலில்தான் இந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ கதையும் எங்களுக்கு கிடைத்தது. அறிமுக இயக்குரான சுரேஷ் சங்கையா, இந்தக் கதையைக் கூறும்போதே நாங்கள் குலுங்கி, குலுங்கி சிரித்துவிட்டோம். அந்த அளவுக்கு கதையும், கலாச்சாரமும், நகைச்சுவையும் ஒன்று சேர அமைந்திருந்தது இந்தப் படத்தின் கதை.

எங்களது அடுத்தடுத்த படங்களை நாங்கள் விரைவில் அறிவிக்க உள்ளோம். ஒரு சில பெரிய பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் இதில் அடக்கம்..” என்று தன்னம்பிக்கையோடு கூறினார்.

Our Score