நல்ல தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம். அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விதார்த் மற்றும் பிரபல டப்பிங் கலைஞரான ரவீணா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“அறிமுக இயக்குநர்களுக்கும் அவர்களின் தரமான படைப்புகளுக்கும் உகந்த ஆண்டு 2017. அதனை எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தும்.
புதுமையான கதைக் களங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் வெளியான ‘துருவங்கள் 16’, ‘குற்றம் 23’, ‘மாநகரம்’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படங்கள். நிச்சயமாக அந்த வரிசையில் எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படமும் இடம் பெறும் என உறுதியாக நம்புகின்றேன்.
சுரேஷ் சங்கையாவின் கதை மீதும், அவர் படத்தை உருவாக்கிய விதமும்தான் எங்களின் அந்த உறுதியான நம்பிக்கைக்கு காரணம். எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் அந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும்…” என்கிறார் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் மூத்த துணை தலைவரான சாகர் சத்வானி.
“ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறும், அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் சவாலான காரியமாகவே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் உலக சினிமா மீது வைத்திருக்கும் பேரார்வம்தான். தற்போது அவர்களின் ரசனைகளை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக இருக்கின்றது.
நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் என இரண்டின் கலவையில் மிக அழகாக உருவாகி இருக்கும் எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம், வருகின்ற மே 6-ம் தேதி நியூயார்க் நகரத்தில் உள்ள ‘வில்லேஜ் திரையரங்கில் திரையிடப்படுகின்றது. அதுமட்டுமின்றி நியூயார்க் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படம் திரையிடப்பட இருக்கின்றது..” என்று கூறுகிறார் ஈரோஸ் சவுத் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிட்தி புஜாரா.