full screen background image

‘கதகளி‘ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்..!!

‘கதகளி‘ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்..!!

நடிகர் விஷால் நடித்த ‘கதகளி’ திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி இன்னமும்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் சிறுபாண்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் பல சிறுபான்மை அமைப்பினரும் நடிகர் விஷாலிடம் நேரடியாக, பிறர் மனம் புண்படும்படியாக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் விஷால் தன்னிச்சையாகவே முன் வந்து அந்தக் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய வசனக் காட்சிகளை திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் நீக்கிவிட்டார்.

20 நொடிகள் நீளமுள்ள அந்தக் காட்சி நேற்று முதல் தியேட்டரில் நீக்கப்பட்டுவிட்டது என்று இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

kathakali-censor-cut-certifcate

Our Score