பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா, கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட.’
விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி, இசை – பரணி, பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா, – படத் தொகுப்பு – விது ஜீவா, நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா, சண்டை பயிற்சி – சண்டை பயிற்சி – குபேந்திரன், கலை இயக்கம் – ராம், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், தயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி, எழுத்து, இயக்கம் – பரணி.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பரணி, “இந்த ‘ஒண்டிக்கட்ட’ படம் ஒரு யதார்த்தமான படம். ஒரு மெல்லிய நீரோடையில் பயணப்படுகிற மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். நாம் நாகரிக முலாம் பூசிக் கொண்டாலும், உள்ளுக்குள் கிராமிய சிந்தனைகளே அதிகம் கொண்டவர்கள்.
நகரத்து வாழ்க்கை சலிப்புறும் எவருமே கிராமத்து மண் வாசனையை எதிர்பார்த்து ஏங்கி கிடப்பார்கள். இந்த படத்தில் அந்த கிராமத்து எதார்த்தம் இருக்கும். எனது முந்தைய படங்கள் பலவற்றின் பாடல்கள், பட்டி தொட்டியெல்லாம் என்னையும், என் படத்தையும் கொண்டு சேர்த்தது.
அதேபோல இந்த ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் பாடல்கள் இப்போதே பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் ‘துண்டு பீடி’ பாட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நான் தஞ்சாவூருக்கு போயிருந்தேன். அங்கே நான் பயணம் செய்த காரில் நான் இயக்கியிருக்கும் ‘ஒண்டிக்கட்ட’ பாட்டுதான் பாடிக் கொண்டிருந்தது. ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்…?
இசையால் எதையும் வெல்ல முடியும்.. அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரை எவரையும் இசையால் கட்டிப் போட முடியும். புராண காலங்களில் கடவுள்கூட இசைக்கு மயங்கிய கதைகளை கேட்டிருக்கிறோம். இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் எனக்கு இன்னொரு புது வாழ்க்கையை அமைத்து தரும் என்று நம்புகிறேன்.
பாடல்கள் மட்டுமில்லை படமும் எனக்கு பேர் வாங்கித் தரும். படத்தைப் பார்த்தவர்கள் அத்தனை பேருமே கை தட்டி பாராட்டினார்கள். படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது…” என்கிறார் பெருமையுடன்..!










