வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.
தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் நாயகியாக அமைரா தஸ்தர் நடிக்கிறார். மற்றும் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி… இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கோபிநாத், இசை – ஜிப்ரான், கலை – வனராஜ், சண்டை பயிற்சி – சில்வா, படத் தொகுப்பு – ராமாராவ், தயாரிப்பு நிர்வாகம் – மகேஷ், தயாரிப்பு மேற்பார்வை – பால கோபி, மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், கதை, திரைக்கதை, வசனம் – ஞானகிரி, இயக்கம் – கே.எஸ்.மணிகண்டன்.
இந்தப் படத்தில் சந்தானம் முதல் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். முழுக்க. முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் இறுதி படப்பிடிப்பு துவங்கவுள்ளது.