மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது..!

மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது..!

மணிரத்னம் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்றிருக்கிறது.

துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னமே தயாரித்து இயக்கியிருக்கிறார்.

எப்படியும் மே மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டூடியோ கிரீன் போன்ற தற்போது செல்வாக்குள்ள விநியோகஸ்தர்களோடு இணைந்தே செல்வோம் என்கிற நல்ல வழியை மணிரத்னம் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

Our Score