full screen background image

12-வது முறையாக இணைந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி..!

12-வது முறையாக இணைந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி..!

யாரும் எதிர்பாராத இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்துள்ள இயக்குநர் மணிரத்னம், தற்போது  ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதை மீண்டும் கொள்ளை கொள்ள வருகிறார்.

மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இருவரும் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். மேலும் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன், ரம்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகையர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத், கலை – சர்மிஷ்தா ராய், நடனம் –  பிருந்தா, ஆடை வடிவமைப்பு – ஏகா லகானி, தயாரிப்பு நிர்வாகம் – மாலா மன்யன், மக்கள் தொடர்பாளர் :   நிகில், தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ்

‘ஓ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கை கோர்த்திருக்கிறார் மணிரத்னம்.   ‘மெளனராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும் ‘அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.

‘ரோஜா’ முதல்  தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.   இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும்12-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஓ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருக்கிறார்.

இப்படத்தின் டிரெயிலர் இன்று சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் வரும் மார்ச் 6-ம் தேதி டிரெயிலர் வெளியாகும்.

Our Score