full screen background image

கால்பந்து விளையாட்டை முன்னிறுத்தும் ‘6, வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ திரைப்படம்

கால்பந்து விளையாட்டை முன்னிறுத்தும் ‘6, வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ திரைப்படம்

I Creations மற்றும் PSS Productions நிறுவனங்களின் சார்பில் டாக்டர் சேவரா தீனா, ப்ரீத்தி சங்கர், திருமதி உஷா, ஹரி உத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் எண்-6, வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’.

இந்தப் படத்தில் நடிகர் சரத் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ‘அருவி’ படத்தில் நடித்திருந்த மதன், விஜய் முத்து, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி, அழகப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர். சண்டை இயக்குநரான நரேந்திரன் இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு – வினோத் ராஜா, இசை – ஏ.ஜெ.அஸிமிஸக், படத் தொகுப்பு கணேஷ் குமார், கிஷோர், சண்டை இயக்கம் – கோட்டி, நடன இயக்கம் – சசிகுமார், பாடல்கள் – குவைத் வித்யாசாகர், ஹரி உத்ரா, எழுத்து, இயக்கம் – ஹரி உத்ரா.

இந்தப் படத்தை தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் ஹரி உத்ரா இயக்கியிருக்கிறார். இவர், ஏற்கெனவே தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’, ‘கல்தா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் கால்பந்து விளையாட்டைப் பற்றிப் பேசுகிறது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டர்களில் தமிழகத்தின் முன்னணி கால்பந்து வீரர்கள் நடிக்கவுள்ளனர்.

கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் அரசியல் கட்சி மற்றும் தலைவர்களின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிக்காட்டும்விதமாய் இத்திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைந்திருக்கிறதாம்.

இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடைபெறவுள்ளது. பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

வரும் மே மாதம் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score