full screen background image

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘நின்னு விளையாடு’ திரைப்படம்!

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘நின்னு விளையாடு’ திரைப்படம்!

RAJ PEACOCK MOVIES சார்பில் எம் கார்த்திக் தயாரித்துள்ள படம் ‘நின்னு விளையாடு.’

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரும், கதாநாயகியாக நந்தனா ஆனந்தும் நடித்துள்ளனர். மேலும் தீபா சங்கர், பழ.கருப்பையா, பசங்க சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சத்திய தேவ் உதயசங்கர் இசையமைக்க, பிச்சுமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் கி.சங்கர் படத்தொகுப்பை ஏற்கிறார். சி.சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். எம்.சரத்குமார், கீர்த்தி வாசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

மண்வாசம் கலந்த மதுரையில் ஒரு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காளை மாடு வளர்க்கும் இளைஞனின் காதலும், வீரமும் கலந்த பாசப் போராட்ட குடும்பக் கதை இது.

காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வில் காதலுடன் கலந்து உணர்வு பூர்வமாக குடும்ப உறவுகளுக்கு மத்தியில் காதலா, காளை மாடா என்ற பாசப் போராட்டத்தை கருவாகக் கொண்ட கதைக்களம் ஜாதி மதங்களை ஒன்றிணைக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வரும் மே மாதம் 3-ம் தேதி திரைக்கு வருகிறது.

Our Score