full screen background image

கோலிவுட் நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘நிபுணன்’ திரைப்படம்

கோலிவுட் நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘நிபுணன்’ திரைப்படம்

எந்த ஒரு துறையிலும் வெற்றி காண்பதற்கு ‘நிபுணத்துவம்’ மிக அவசியம். அந்த வகையில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில், ‘PASSION STUDIOS’ சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் ‘நிபுணன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆக்சன் கிங் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்திலும், பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி மற்றும் வைபவ் முக்கிய கதாபாத்திரத்திலும் இந்த ‘நிபுணன்’ படத்தில் நடித்துள்ளனர்.

nibunan stills-1  

“மிகவும் வித்தியாசமான முறையில்  ‘நிபுணன்’ படத்தை விளம்பரம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம்.

ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று எண்ணி, ‘நிபுணன்’ படத்தின் தலைப்புக்கு என்றே டீசரை நாங்கள் வெளியிட இருக்கின்றோம். இந்த டீசர் மூலம் நாங்கள் எங்கள் படக் குழுவினரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

அது மட்டுமின்றி,  ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்த டீசர் முழுவதும், ‘நிபுணன்’ படத்தின் பின்னணி இசை ஒலித்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் தனி சிறப்பு.

எங்களின் இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கின்றது. எப்படி எங்கள் ‘நிபுணன்’ படத்தின் கதையில் நாங்கள் புதிய யுக்தியை கையாண்டு உள்ளோமோ, அதே புத்தம் புதிய யுக்தியை எங்கள் விளம்பரங்களிலும் நாங்கள் கையாள உள்ளோம்.

வருகின்ற கோடை கால இடையில் நாங்கள் ‘நிபுணன்’ படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்…” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘நிபுணன்’ படத்தின் இயக்குநரான அருண் வைத்தியநாதன்.

Our Score