full screen background image

NFDC-யில் படம் தயாரிக்க வரும்படி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு..!

NFDC-யில் படம் தயாரிக்க வரும்படி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு..!

பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிப்பு / இணை தயாரிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவி்த்துள்ளது.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், பல்வேறு  இந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிப்பு /  இணை தயாரிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://nfdcindia.com/apply-now/  என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், 6-ம் தளம், டிஸ்கவரி ஆஃப் இந்தியா பில்டிங், டாக்டர் அன்னி பெசன்ட் ரோடு, நேரு செண்டர், ஓர்லி, மும்பை -400 018 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது தவிர விண்ணப்பங்களை புதுதில்லி, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்திற்கும் https://www.nfdcindia.com/contact-us/  என்ற  இணையதளத்தில் உள்ள அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.

அவசர விசாரணைகளுக்கு 0 2 2 – 6 6 2 8 8 2 8 8  என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்களை 31 ஜனவரி 2022 வரை அனுப்பலாம். 

மேலும் விவரங்களுக்கு filmproduction@nfdcindia.com  என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

Our Score