விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’

விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப் படங்களை தந்து வரும் நடிகை நயன்தாரா தன் 65-வது படத்தில் மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் கலக்க வருகிறார்.

‘நெற்றிக்கண்’ எனும் தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ்  சிவன் தனது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.

2

இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – N.கார்த்திக் கணேஷ், கலை இயக்கம் – S.கமலநாதன், சண்டை இயக்கம் – C.மகேஷ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், உடை வடிவமைப்பு – சைதன்யா, ராவ், தினேஷ் மனோகரன், வசனம் – நவீன் சுந்தரமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one, இணை தயாரிப்பு – K.S.மயில்வாகணன், தயாரிப்பு மேற்பார்வை –  V.K.குபேந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – G முருகபூபதி, M.மணிகண்டன்.

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்த ‘அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்குகிறார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்  நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்டமான வெற்றிப் படமான ‘நெற்றிக்கண்’ என்கிற தலைப்பு, இப்படத்திற்கும் கிடைத்ததில் மொத்த படக் குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் முதல் படைப்பு ‘நெற்றிக்கண்’ திரைப்படமாகும்.

1

இது பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது, “எங்கள் மொத்தப் படக் குழுவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கும், கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி அவர்களுக்கும் பெரும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

மேலும் நயன்தாராவை ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் கவிதாலயா நிறுவனம்தான் என்பதையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறுகிறோம்.

இயக்குநர் மிலிந்த் ராவ்வின் ‘நெற்றிக்கண்’ படத்தின் திரைக்கதை அவரது முந்தைய படமான ‘அவள்’ படத்தினைப் போலவே ஒரு அற்புதமான திரில்லராக அமைந்திருக்கிறது. ‘அவள்’ படத்தினை போலவே இப்படமும் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்…” என்றார்.

தற்போது படத்தின்  மற்ற நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.

Our Score