full screen background image

குடி போதையில் நடிக்க வந்த ஹீரோ-ஹீரோயினின் ட்வீட்டர் செய்தி..!

குடி போதையில் நடிக்க வந்த ஹீரோ-ஹீரோயினின் ட்வீட்டர் செய்தி..!

நடிகைகள் மட்டுமே அகில இந்திய அளவில் பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மொழியில் நடிப்பதைத் தவிர்த்தால் ஏன் என்ற கேள்வி எழும். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பிப்பார்கள். அது அதிகப்பட்சம் என்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் ராசியில்லை என்பதால் விட்டுவிட்டேன் என்பார்கள். ஆனால் தெலுங்கில் தான் நடிக்காமல் ஒதுங்கியதற்கு  புதிய காரணம் ஒன்றை நடிகை நீத்து சந்திரா கூறியிருக்கிறார்.

2009-ம் ஆண்டு ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் ராஜசேகருடன் இணைந்து நடித்தாராம். இது ராஜசேகரின் சொந்தப் படம். ராஜசேகரின் மனைவி ஜீவிதாதான் படத்தின் இயக்குநர்.

satyameva-jayathe-stills53

அந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு பல முறை மது அருந்திய நிலையிலேயே வந்திருந்தாராம் ராஜசேகர். கூடவே தன்னுடைய கைத்துப்பாக்கியையும் உடன் கொண்டு வந்தாராம். “இது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே நான் தெலுங்கு பக்கம் போகாமல் இருந்துவிட்டேன்..” என்று இன்றைக்கு ட்வீட்டரில் புலம்பியிருக்கிறாராம்.

நெடு நாட்களுக்குப் பிறகு இது பற்றி நடிகர் நாகார்ஜூனாவிடம் கூற.. அவர் நீத்துசந்திராவை சமாதானப்படுத்தி இப்போது தான் எடுத்திருக்கும் மனம் படத்தில் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறாராம்.. இந்தப் படம் வரும் மார்ச்-31-ம் தேதி ரிலீஸாக உள்ளது..

“5  வருடங்கள் கழித்து,  இதனை ஏன் வெளியில் சொல்கிறீர்கள்?” என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, “ராஜசேகர் ஒரு பிரபலமானவர்.. அப்போ சொல்லணும்னு தோணலை. இப்போ அவரைப் பத்தி பலரும் தெரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் வெளில சொன்னேன்..” என்று பதிலளித்திருக்கிறார் நீத்து சந்திரா.

ஏற்கெனவே டாக்டர் ராஜசேகரும், அவரது மனைவி ஜூவிதாவும் கடும் கோபக்காரர்கள்.. சின்னப் பிரச்சினை என்றாலே அனைத்து சேனல்களின் அலுவலகங்களுக்கும் நேரில் வந்து மணிக்கணக்கில் விளக்கம் கொடுப்பார்கள். இதுக்கு எப்படியோ.. கச்சேரி நாளை ஆரம்பித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

Our Score