full screen background image

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், சிறு வயதிலேயே “மாஸ்டர் மகேந்திரன்” என பெயர் பெற்றார். இளம் வயதில் விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் (பவானி) மூலம் புகழ் பெற்ற இவர், அதன்பிறகு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

மகேந்திரன் நடிப்பில் உருவான ‘நீலகண்டா’ திரைப்படம், கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் எதிரியை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டு, அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.

இந்த படத்தை ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பு: எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் (M ஸ்ரீனிவாசு & D வேணுகோபர்), நிர்வாக தயாரிப்பு: அனில் இனமடுகு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஸ்ரவன் ஜி குமார், இசை: மார்க் பிரசாந்த்.

படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு, சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இது இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Our Score