நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘புலிப்பார்வை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சீமானுக்கு எதிராகக் குரல் கொடுத்தமைக்காக சில மாணவர்களை சீமான் கட்சி தொண்டர்களை கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளதை பழ.நெடுமாறன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புலிப்பார்வை’ இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் தங்களுக்கு இருந்து ஒரு சில ஐயங்களை விழா ஏற்பாட்டாளர்களிடம் எழுப்பினர். அதற்கு அங்கு இருந்த சமுக விரோத கும்பல் அந்த மாணவர்களை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியது. இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்கள் மீண்டும் தொடருமானால், அந்த சமூக விரோத கும்பல் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்…” என்று கூறியுள்ளார்.
நேற்று காலை தாக்குதல் சம்பவம் நடந்தவுடனேயே நெடுமாறன் திரைப்பட இயக்குநர் வா.கெளதமனை தொடர்பு கொண்டு உடனேயே மாணவர்களைச் சென்று சந்தித்து ஆறுதல் கூறுமாறு கேட்டுக் கொண்டாராம்..
போலீஸாரி்ன் பாதுகாப்பில் ஜாம்பஜாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மாணவர்களை கெளதமன் நேரில் சந்தித்து சம்பவத்தைக் கேட்டறிந்து உதவிகள் செய்தாராம்..!
முள்ளிவாய்க்கால் போருக்கு பின்பு இங்கேயிருக்கும் தலைவர்களுக்கு ஈழம் தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இதைத்தான் இந்திய அரசும், இலங்கை அரசும் கச்சிதமாக தங்களது சுயலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்..
புரிந்து கொண்டால் சரி..!