நடிகை நஸ்ரியாவுக்கும் நடிகர் பகத் பாசிலுக்கும் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21-ம் தேதி மதியம் 12 மணிக்கு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காலகுட்டம் என்ற இடத்தில் உள்ள அல்சாஜ் கன்வென்ஷன் சென்டரில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளதாம்..
ஆகஸ்ட் 24-ம் தேதியன்று ஆலப்புழாவில் திருமண வரவேற்பு நடைபெறவிருக்கிறதாம்..
நஸ்ரியா புதிய திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களை மட்டுமே நடித்து வந்தார். அதில் ஒரேயொரு படத்தைத் தவிர மற்றதையெல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டாராம்.. இப்போது கடைசியாக தனது வருங்கால கணவரான பகத் பாசிலுடன் இணைந்து ‘L For Love’ என்ற படத்தில் நடித்து வருகிறாராம்.
சிறந்த நடிகை.. இன்னும் பல வருடங்கள் இருந்து நடிப்பில் கொடி கட்டிப் பறப்பார் என்று எதிர்பார்த்தோம்..!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..!