இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் துவங்கியது

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் துவங்கியது

தயாரிப்பாளர் நேமிசந்த் ஜெபக்கும், இயக்குநர் சற்குணமும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது.

இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, ஹரீஷ் உத்தமன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய.. விவேக் மெர்வின் இசையமைக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி செய்கிறார். பாபி ஆண்டனி நடனம் அமைக்கிறார். கோபி கிருஷ்ணா படத் தொகுப்பினை மேற்கொள்கிறார். அனுவர்த்தன் உடைகளை வடிவமைக்கிறார். சசிகுமார் மேக்கப் கலையை கவனிக்க சற்குணத்தின் உதவியாளரான தாஸ் ராமசாமி என்ற புதியவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் வழக்கம்போல ஹீரோயின் நயன்தாராவைத் தவிர படம் சம்பந்தப்பட்ட அனைவருமே கலந்து கொண்டார்கள்.